Monday, 30 September 2013

பள்ளிக்கல்வித்துறை ஏற்பாட்டில் உதடு பிளவுபட்ட மாணவர்களுக்கு இலவசமாக அறுவை சிகிச்சை ஆசிரியர்களுக்கு இன்று விழிப்புணர்வு பயிற்சி

உதடு பிளவு பட்ட பள்ளிக்குழந்தைகளுக்கு இலவச அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது. அதற்கான விழிப்புணர்வு பயிற்சி முகாம் இன்று ஸ்ரீராமச்சந்திரா பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது. இதில் ஆசிரியர்கள் கலந்துகொள்கிறார்கள்.

உதடு பிளவுபட்ட குழந்தைகள்:

பிறக்கும்போது உதடு பிளவு பட்ட நிலையில் சில குழந்தைகள் பிறப்பது உண்டு. இதை அன்னபிளவு என்று அழைப்பார்கள். இந்த பிளவை சிறு வயதிலேயே அறுவை சிகிச்சை செய்து உதட்டை தைத்துவிட்டால் அந்த பிளவுடன் பிறந்ததாகவே தெரியாது. அந்த அளவுக்கு அந்த அறுவைசிகிச்சைவெற்றிகரமாக அமையும்.
இந்த அறுவை சிகிச்சையில் மக்களிடம் நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டு குழந்தை பருவத்திலேயே அறுவை சிகிச்சை செய்துவிடுகிறார்கள்.
ஆனால் மிக குக்கிராமங்களில் விழிப்புணர்வு இல்லாத மக்கள் இதை தெய்வக்குற்றம் அதை அப்படியே இருந்தால் தான் அந்த குழந்தை பிழைக்கும் என்ற மூட நம்பிக்கையுடன் இன்னும் இருக்கிறார்கள்.
அப்படிப்பட்ட மூட நம்பிக்கையை களையவும், உதடு பிளவு பட்ட குழந்தைகள் பள்ளிக்கூடத்திற்கு வந்தாலும், எங்காவது தெருவில் பார்த்தாலும் அந்த குழந்தையின் பெற்றோர்களிடம் பேசி, விழிப்புணர்வு ஏற்படுத்தி அறுவை சிகிச்சை செய்ய தமிழ்நாடு ஆசிரியர் பயிற்சி கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனரகம் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவ பல்கலைக்கழகமும் சேர்ந்து முடிவு செய்துள்ளது. இந்த அறுவை சிகிச்சை முழுக்க முழுக்க இலவசமாகும்.

ஆசிரியர்களுக்கு பயிற்சி
விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக முதல் கட்டமாக தமிழ்நாடு முழுவதும் இருந்து 70 ஆசிரியர்களுக்கு பயிற்சி ஸ்ரீராமச்சந்திரா பல்கலைக்கழகத்தில் இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணி முதல் அளிக்கப்படுகிறது. இதில் ஆசிரியர் பயிற்சி கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனர் கண்ணப்பன் உள்ளிட்ட பல கல்வித்துறை அதிகாரிகளும் கலந்து கொள்கிறார்கள்.
பயிற்சி பெறும் ஆசிரியர்கள் அந்தந்த மாவட்டங்களுக்கு சென்று மற்ற ஆசிரியர்களுக்கு இந்த பயிற்சியை சொல்லிக்கொடுக்க உள்ளனர்.

No comments:

Post a Comment