Friday, 11 October 2013

பள்ளி சத்துணவால் பாதிப்பு எதிரொலி: வீட்டிலிருந்து சாப்பாடு எடுத்து வந்த 100க்கும் மேற்பட்ட மாணவர்கள்

            
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஆலங்காடு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் கடந்த புதன்கிழமை சத்துணவு சாப்பிட்ட 12 மாணவ மாணவிகளுக்கு வயிற்றுவலி, மயக்கம் ஏற்பட்டதால் முத்துப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 
உயர் அதிகாரிகள் விசாரணையில் இந்த பள்ளிக்கு என தனியாக சத்துணவு மையம், சமையல்காரர்கள் இல்லாததால் உயர்நிலைப்பள்ளியிலிருந்து சாப்பாடு எடுத்து வரப்பட்டு சரியான நேரத்தில் வழங்கப்படாத காரணம் மற்றும் அரிசி, பருப்பு போன்ற பொருட்கள் தற்பொழுது பல மாதங்களுக்கு முன்பு இருப்பில் வைக்கப்பட்ட பழைய ஸ்டாக் என்று கண்டுபிடிக்கப்பட்டது. 
இதனை ஆய்வு செய்த முதன்மை கல்வி அலுவலர் மணி விரைவில் தனியாக இந்த பள்ளிக்கு சத்துணவு கூடம் அமைக்கப்படும் என்றார். இந்த நிலையில் வியாழக்கிழமை வழக்கம்போல் பள்ளி துவங்கியது. 172 மாணவர்கள் படிக்கும் பள்ளியில் பெரும்பாலான மாணவர்கள் அனைவரும் தவறாமல் வந்திருந்தனர்.

இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தங்களது விட்டிலிருந்து மதியம் சாப்பாடு எடுத்து வந்திருந்தனர். பின்னர் மதியம் சாப்பாட்டு நேரத்தில் சாப்பிடும் இடத்தில் உட்கார்ந்து அனைவரும் சாப்பிட்டனர். சாப்பாடு எடுத்து வராமல் தனது நண்பர்களுக்கு தனது சாப்பாடுகளை ஊட்டிவிட்டு சமாளித்தனர். மீதம் காத்திருந்த மாணவர்களுக்கு உயர்நிலைப் பள்ளியிலிருந்து வழக்கம்போல் எடுத்து வரப்பட்ட சத்துணவு பரிமாறப்பட்டது. 

அப்பொழுது முதலாவதாக பள்ளியின் தலைமை ஆசிரியர் கருணாநிதி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சத்துணவை சாப்பிட்டு பார்த்தார். 5 நிமிடம் கழித்துதான் மற்ற மாணவர்கள் சாப்பிட்டனர். 

No comments:

Post a Comment