Tuesday, 22 October 2013

2013, ஜுன் மாத நெட் தேர்வு முடிவுகள் வெளியீடு

2013ம் ஆண்டு ஜுன் மாதம் நடத்தப்பட்ட நெட் தேர்வு மற்றும் டெல்லி மற்றும் ராஞ்சி மையங்களில் செப்டம்பர் 8ம் தேதி நடத்தப்பட்ட நெட் மறுதேர்வு ஆகியவற்றின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.இத்தேர்வுகளை, 5 லட்சத்து 74 ஆயிரத்து 448 மாணவர்கள் எழுதினார்கள். இவர்களில், 27,402 மாணவர்கள் லெக்சர்ஷிப் தேர்ச்சி பெற்றுள்ளார்கள் மற்றும் 3,684 பேர் JRF தேர்ச்சி பெற்றுள்ளார்கள்.2013ம் ஆண்டு ஜுன் மாதத்தில், 78 பாடங்களுக்கு, நாடு முழுவதும் 79 மையங்களில் நெட் தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வுக்கான Answer keys ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்தது. தற்போது, அதற்கான இறுதி முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment