Wednesday, 2 October 2013

25 மாவட்டங்களில் தீவிர ஆய்வு - பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் அதிகம்


லிட்டில்ஸ் குழுந்தைகள் மைய நிர்வாக அறங்காவலர் டி.ஆர்.பர்வத வர்த்தினி சென்னையில் நேற்று கூறியதாவது: லிட்டில்ஸ் குழந்தைகள் மையம் சார்பில் 2012 ஜனவரி முதல் 2013 ஜுன் வரை தமிழகத்தில் வளர் இளம் பருவ குழுந்தைகளின் வறுமையை புரிந்து கொள்ளுதல் என்ற தலைப்பில் ஆய்வு நடத்தப்பட்டது. சமகல்வி இயக்கம், சிஆர்ஓய் அமைப்பும் இணைந்து பணியாற்றியது. இதில், 25 மாவட்டங்களை சேர்ந்த 2,436 மாணவர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. முக்கியமாக 14 வயதில் இருந்து 18 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லும், பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திய மாணவ, மாணவிகளிடம் தான் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 
25 மாவட்டங்களிலும் தலா 100 பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது. 50 பெண்கள், 50 ஆண்கள். மாணவர்களின் பள்ளி இடைநிற்றலுக்கான சமூக, பொருளா தார, கலாசார, அரசியல் ரீதியான காரணங்கள் கண்டறியப்பட்டது. பதில் அளித்த 2436 பேரில், 1,760 பள்ளி குழுந்தைகள் இடையில் படிப்பை நிறுத்தி வேலை க்கு செல்பவர்கள். 13.8 சதவீத பெற்றோர் அவர்கள் குழந்தை தொழிலாளர்களாக இருந்தபோதே, வாழ்க்கையை ஆரம்பித்துள்ளனர். 
7 சதவீத குழந்தைகள் கொத்தடிமைகளாக வேலை செய்கின்ற னர். மேலும், 57 சதவீத தந்தையர்கள் குடிப்பழக்கத்திற்கு ஆளாகியுள்ளனர். மாதம் 1000 முதல்  5000 வரை செலவழிக்கின்றனர். 40.1 சதவீத குடும்பங்கள் கடன் தொல்லையால் தவிக்கின்றனர். வீடு மற்றும் மருத்துவ வசதிக்காக கடன் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர். 

35 சதவீத குழுந்தைகள் கல்வி மீதான பயத்தால் பள்ளியிலிருந்து நின்றுவிடுன்றனர். 

சரியான நேரத் தில் பள்ளி செல்ல, முறையான போக்குவரத்து வசதி இல்லாததால், 65 சதவீத பெண் குழந்தைகளை பள்ளியில் இருந்து விரட்டி அனுப்புகின்றனர். 1.2 சதவீத குழந்தைகள் இன்னும் பள்ளிக்கே செல்லவில்லை. 14 முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு திட்டமிடல், சட்டம் ஆகியவை முறையாக இல்லை. சாதி, வகுப்பு, வயது, பாலின ரீதியாக அனைத்து கொடுமைகளுக்கும் சுரண்டல்களுக் கும் ஆளாகி வருகின்றனர். 
குழந்தை உரிமைகளை காக்க ஒரு குழு அமைக்கப்பட வேண்டும். இந்தியா வில் வளர் இளம் பருவ குழந்தைகளின் உண்மை நிலை குறித்து விரிவான அறிக்கை வெளியிட வேண்டும். இந்தியாவில் உள்ள 18 வயதுக்குட்பட்ட அனை வரும் குழந்தைகள் என சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும். எங்களின் பரிந்துரைகளை தமிழக முதல்வரிடம் அடுத்த வாரம் அளிக்கவுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். 
இது தொடர்பாக சமகல்வி இயக்க பொதுசெயலாளர் செல்ல செல்வக்குமார், குழந்தை தொழி லாளர் எதிர்ப்பிற்கான இயக்க நிர்வாகி ஜோசப் விக்டர் ராஜ் ஆகியோர் கூறுகையில், ‘‘தமிழகத்தின் வளர் இளம் பருவ குழந்தைகள் திருப்பூர் உள்ளிட்ட தொழில் நகரங்களில் கொத்தடிமைகளாக வேலை செய்கின்றனர். பிற மாநிலங்களிலிருந்து இடம் பெயர்ந்து கட்டிட தொழிலாளர்களாகவும், மில்களிலும், பட்டறைகளிலும் அன்றாட கூலிகளாகவும் இருக்கின்றனர். இதற்காக தனி ஏஜென்சிகள் செயல்படுகின்றன. இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 6 முதல் 14 வயது என் பதை 18 வயது வரை விரிவுபடுத்த வேண்டும்’’ என்றனர்.
வீடுகளின் நிலை
* 9.6% மின்வசதி இல்லை.  

* 72.2% கழிப்பறை வசதி இல்லை.

பள்ளிகளின் நிலை
* 20.48% குடிநீர் வசதி இல்லை.
* 38.% விளையாட்டு மைதானம் இல்லை.

* 12.1% பாலின ரீதியாக 
ஆசிரியர்களால் துன்புறுத்தப்படுகிறார்கள்.

மனநிலை
* 30% குழந்தைகள் மன அழுத்தத்திற்கு ஆளாகி உள்ளனர். 
* 22% குழந்தைகளுக்கு 2 வேளை உணவு மட்டுமே கிடைக்கிறது.


எக்ஸ்ட்ரா தகவல்
தமிழ்நாட்டில் 2000ம் ஆண்டு மொத்தம் 44,784 பள்ளிகள் இருந்தன. 2012ம் எடுத்த கணக்குப்படி 56,729 பள்ளிகள் உள்ளன.

No comments:

Post a Comment