தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால் தமிழகத்தில் மின் விநியோகம் 99 சதவீதம் சீரடைந்துவிட்டதாக முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் கூறியுள்ளார். எஞ்சிய 1 சதவீதம் மின் விநியோகத்தையும் வரும் டிசம்பர் மாதத்திற்குள் அரசு சீர் செய்யும் என்று அறிவித்துள்ளார். தமிழகத்தின் மின்நிலவரம் குறித்து சட்டப்பேரவையில் ஜெயலலிதா விளக்கமளித்தார். பாலபாரதி, ஆறுமுகம் கொண்டு வந்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு முதல்வர் ஜெயலலிதா பதிலளித்து பேசினார்.
அப்போது பேசிய அவர் தமிழகத்தை மின்மிகை மாநிலமாக்க அதிமுக அரசு உறுதி பூண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் மின் திட்டங்கள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார். புதிய மின் உற்பத்தி திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் கூறினார்.
No comments:
Post a Comment