Thursday, 24 October 2013

புதிய தேர்வு மையங்கள்: தனியார் பள்ளிகளுக்கு தேர்வுத்துறை செக்

வரும்மார்ச்ஏப்ரலில் நடக்க உள்ள பிளஸ் 2, 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளையொட்டிபுதிய தேர்வு மையங்களுக்கு அனுமதி வழங்குவதில்தேர்வுத் துறைகடும் கட்டுப்பாடுகளை கொண்டு
வந்துள்ளது. ஒரு தேர்வு மையத்திற்கு அருகே, புதிய தேர்வு மையத்திற்கு அனுமதி வழங்க முடியாது எனதேர்வுத் துறை தெரிவித்துள்ளது. இதுதனியார் பள்ளிகளுக்குதேர்வுத் துறை வைத்துள்ள அடுத்தசெக்!.

பொதுத் தேர்வு எழுதுவதற்கான மையங்களின் எண்ணிக்கை,ஒவ்வொரு ஆண்டும், 50 முதல் 100 வரை அதிகரிக்கின்றன. தனியார் பள்ளிகளை பொறுத்தவரைதங்கள் பள்ளியைதேர்வு மையமாக அங்கீகாரம் பெறுவதைமிகவும் முக்கியமாக கருதுகின்றன. ஏனெனில்அப்போது தான்மாணவர் சேர்க்கையை அதிகரிக்க முடியும் என்பதுடன்தேர்வு மைய அங்கீகாரம் இருப்பதைகவுரவமாகவும்
கருதுகின்றனர். ஆனால்சில பள்ளிகள்தங்கள் பள்ளி மாணவர்கள், 100 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக,தேர்வு மையத்தை தவறான செயல்களுக்கு பயன்படுத்துகின்றன.

திருவண்ணாமலையில் உள்ள ஒரு மெட்ரிகுலேஷன் பள்ளி நிர்வாகம்தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்டதைஅப்போதைய மாவட்ட கலெக்டர்அன்சுல் மிஸ்ராகையும்களவுமாக பிடித்த விவகாரம்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்துஅந்த பள்ளியின் தேர்வு மைய அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது. இதுபோன்ற பல முறைகேடுகள் நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதால்இந்த ஆண்டுபுதிய தேர்வு மையங்களுக்கு அனுமதி வழங்குவதில்தேர்வுத் துறைகடும் கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது.

இதுகுறித்துதேர்வுத் துறை வட்டாரம் கூறியதாவது: ஒரு தேர்வு மையத்திற்கு அருகில்புதிய தேர்வு மையத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது என்பதில்உறுதியாக உள்ளோம். இதுபோன்று,அருகருகேதேர்வு மையங்கள் அமைவதுதேவையற்றது. புதிய தேர்வு மையம் கேட்கும் பள்ளியில்எத்தனை மாணவர்கள்,பொதுத் தேர்வை எழுத உள்ளனர் என்ற விவரத்தை பார்த்துஅந்த மாணவர்களைஏற்கனவே பக்கத்தில் உள்ள மையத்திலேயே தேர்வெழுத வைக்க முடியுமா எனஆய்வு செய்வோம். முடியும் எனில்புதிய தேர்வு மையத்திற்குஅங்கீகாரம் வழங்கப்படமாட்டாது. தேவையில்லாமல்அதிக மையங்களுக்கு அனுமதி வழங்குவதுநடைமுறை ரீதியாகபல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தும். 

தேர்வின்போதுஅதிகமான மையங்களை கண்காணிப்பதிலும்,சிரமம் ஏற்படும். இதை பயன்படுத்திபள்ளி நிர்வாகங்கள்தேர்வு முறைகேடுகளில் ஈடுபடலாம். இதை எல்லாம் தவிர்க்கவேஇந்த கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளோம்.
புதிய மையங்களுக்கு அனுமதி கேட்டுதற்போதுமாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களிடம்பள்ளி நிர்வாகங்கள் விண்ணப்பித்து வருகின்றன. 

ஒரு பள்ளியில்பிளஸ் 2 வகுப்பில், 150 மாணவர்களும், 10ம் வகுப்பில், 125 மாணவர்களும் தேர்வெழுதினால்அந்த பள்ளிக்கு,தேர்வு மைய அங்கீகாரம் வழங்குவது குறித்துபரிசீலனை செய்வோம். இவ்வாறுதேர்வுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.இந்த, 'கிடுக்கிப்பிடிநடவடிக்கை மூலம்தனியார் பள்ளிகளுக்குஅடுத்தசெக் வைத்துள்ளது தேர்வுத் துறை. ஏற்கனவேபுகைப்படத்துடன் கூடிய விடைத்தாள் மற்றும் பார்கோடிங் முறை ஆகியவற்றால்தனியார் பள்ளிகள் ஆடிப்போய் உள்ளன.

No comments:

Post a Comment