Wednesday, 23 October 2013

மாணவர் பயன் பெற "மொபைல் கவுன்சலிங் வேன்"

 நாமக்கல் உள்ளிட்ட மூன்று மாவட்டங்களை சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்களுக்காக, "மொபைல் கவுன்சலிங் வேன்" வசதி துவக்கி வைக்கப்பட்டது.பள்ளிக் கல்வித் துறை சார்பில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மனஅழுத்தம், தேர்வு அச்சம் நீக்க, மகிழ்ச்சியுடன் கல்வி கற்பிக்க, படைப்புத் திறனை மேம்படுத்த, நடமாடும் உளவியல் பயிற்சி மையம் துவங்கப்பட்டது.அதற்காக, பத்து நடமாடும் உளவியல் பயிற்சி மைய வேன்கள் வாங்கப்பட்டுள்ளது. அதில், "டிவி", செய்முறைப் பயிற்சி, ஆலோசனை "சிடி"க்கள், உளவியல் ஆலோசகர், உதவியாளர் உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.சேலம், நாமக்கல், ஈரோடு கல்வி மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களுக்காக, "மொபைல் கவுன்சலிங் சென்டர்" என்ற பெயரில், நேற்று, நாமக்கல்லில் துவக்க நிகழ்ச்சி நடந்தது. பள்ளிக் கல்வித்துறை (நாட்டுநலப்பணித் திட்டம்) இணை இயக்குனர் உஷாராணி, மாவட்ட கலெக்டர் தட்சிணாமூர்த்தி, சி.இ.ஓ., குமார் உள்ளிட்ட அதிகாரிகள் துவக்கி வைத்தனர்"மூன்று மாவட்டத்தில் உள்ள தேர்வு செய்யப்பட்ட அரசுப் பள்ளிகளில் உள்ள ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு பயிற்சிகள் வழங்கப்படும்" என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment