அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் சார்பில் பள்ளி மாணவர்களிடம் அறிவியல் சிந்தனையை வளர்ப்பதற்காக மாவட்டம்தோறும் அறிவியல் கண்காட்சிகள் நடத்தப்பட உள்ளன.
இதற்காக, ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் மூன்று ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு சென்னையில் வரும் 17, 18 தேதிகளில் பயிற்சி நடத்தப்பட உள்ளது.
இந்தக் கண்காட்சிகளில் மாணவர்களின் புதுமையான கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட உள்ளன.
பெரும்பாலும் நவம்பர் இறுதியில் இந்த கண்காட்சிகள் நடத்தப்படும் எனத் தெரிகிறது.
இதற்காக பள்ளிகள் மற்றும் கல்வி மாவட்ட அளவில் போட்டிகள் நடத்தப்பட்டு சிறந்த படைப்புகள் கண்காட்சியில் இடம்பெறும்.
No comments:
Post a Comment