Wednesday, 2 October 2013

பள்ளிகளில் இடை நிற்கும் குழந்தைகள் கூலித் தொழிலாளிகளாக மாறும் அவலம்

பள்ளிகளில் இருந்து பாதி படிப்பிலேயே இடை நிற்கும் குழந்தைகளில் 87 விழுக்காட்டினர் ஒருங்கி ணைக்கப்படாத கூலித் தொழிலாளிகளாக தமிழ கம் முழுவதும் சிதறுகின்ற னர்.
13 விழுக்காடு குழந்தைகள் குடும்பத் தொழிலிலும் பாரம்பரியத் தொழிலிலும் ஈடுபடுகின்றனர்.மாநிலத்தில் ‘வளரிளம் குழந்தைகளின் வறுமையை புரிந்துக் கொள்ளுதல்’ தொடர்பான ஆய்வு சென்ற ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரை மேற்கொள்ளப் பட்டது. மதுரையை மைய மாகக் கொண்டு செயல் படும் லிட்டில்ஸ் குழந்தை கள் மையம் இந்த ஆய்வை நடத்தியது. குழந்தை உரிமையும் நீங்களும், சமகல்வி இயக்கம் ஆகிய அமைப்புகளும் இந்த ஆய்வுக்கு உதவின. 25 மாவட்டங்களில் 2,436 வளரிளம் பருவக் குழந்தைகளிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வு, அரசாங்கமே குழந்தைகளின் கல்விக்கான பொறுப்பை ஏற்க வேண் டும் என்பதை தெளிவாகக் காட்டுகிறது.
பதிலளித்த குழந்தைகளில் 1,760 பேர் பள்ளி இடை நின்றவர்களும், தற்போது வேலைக்குச் செல்பவர்களும் ஆவர்.8.4 விழுக்காடு குழந்தைகளின் தாய்மார்களும், 7.5 விழுக்காடு குழந்தைகளின் தந்தைமார்களும், 13.8 விழுக்காடு குழந்தைகளின் பெற் றோர்களும் குழந்தைத் தொழிலாளியாக வாழ்க் கையை தொடங்கியவர்கள். குழந்தைத் தொழிலாளர் முறை சங்கிலித் தொடர் போல இருப்பதை இந்த விவரம் உறுதிப்படுத்துகிறது.பள்ளியில் இருந்து இடை நின்று வேலைக்குச் செல்லும் குழந்தைகளில் 7 விழுக்காட்டினர் கொத்தடிமைகளாக இருக்கின்றனர். அனைத்து குழந்தைகளின் குடும்பங்களும் கந்துவட்டி, மருத்துச் செலவுக்கான கடன், கல்விக் கடன் என ஏதேனும் ஒரு வகையில் கடன் வலை யில் சிக்கியுள்ளனர்.
12.1 விழுக்காடு குழந்தை கள் பள்ளிகளில் பாலின பாகுபாட்டிற்கு உட்படுத் தப்பட்டதாகவும், 7.8 விழுக் காட்டினர் சாதிய ரீதியாக பாகுபடுத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். 35 விழுக்காட்டினர் கல்வி மீதான பயத்தால் இடை நின்றுள்ளனர். அவர்களில் 6 விழுக்காட்டினர் ஆசிரி யர்கள் “பெயிலாக்கிவிடுவ தாக” மிரட்டியதால் பள்ளிச் செல்லாமல் நின்றுள்ளனர். இடைநின்ற அனைத்து குழந்தைகளும் பள்ளிகளில் திட்டுதல், அடித்தல், முழங் காலிடச் செய்தல், கிண்டல டித்தல் போன்ற தண்டனை களுக்கு உள்ளானதாக தெரிவித்தனர்.இந்தியாவில் வளரிளம் பருவக் குழந்தைகளின் சமூக, பொருளாதார, கலாச்சார, அரசியல் தாக்கங்கள் குறித்த ஆய்வை ஐ.நா. சபையின் பிரகடன கட்டமைப்புக் குள் நடத்த வேண்டும் என்று ஆய்வுக்குழுவினர் பரிந் துரைத்தனர்.
இதற்காக இந் திய அரசு அந்த கட்டமைப் புக்குள் ஒரு குழுவை அமைக்க வேண்டும் என்றும் அவர் கள் கூறினர்.18 வயதுக்கு கீழ் உள்ளோர் குழந்தைகளே என்ற வரையறையை தொழில், கல்வி உள்ளிட்ட அனைத்து சட்டங்களிலும் முறையாக திருத்தம் செய்து நடை முறைப்படுத்தவும் வலியுறுத்தப்பட்டது. ஆய்வறிக்கை சென்னை யில் செவ்வாயன்று (அக்.1) வெளியிடப்பட்டது. செய்தியாளர்களின் கேள்விகளுக்கு இந்த அமைப்புகளைச் சேர்ந்த பர்வத வர்த்தினி, செல்லா. செல்வகுமார், ஜோசப் விக் டர் ராஜ் பதிலளித்தனர்.

No comments:

Post a Comment