தீபாவளியன்று மட்டும் பூஸ்டர், ரேட்கட்டர் சலுகைகள் கிடையாது. அதனால் அன்று செலபோனில் பேசினால், எஸ்எம்எஸ் அனுப்பினால் வழக்கமான கட்டணமே வசூலிக்கப்படும் என்று பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்துள்ளது. செல்போன் இணைப்பு பெறும்போது பேசுவதற்கும், எஸ்எம்எஸ் அனுப்புவதற்கும் தனித்தனியே கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. அந்த கட்டணத்தை பூஸ்டர், ரேட்கட்டர் சேவைகள் மூலம் குறைத்துக் கொள்ளலாம். அதேபோல் இலவசமாக பேசிக்கொள்ளும், எஸ்எம்எஸ் அனுப்பும் பூஸ்டர் சலுகைகளும் உள்ளன. அதற்கு சேவைகளுக்கும் சலுகைகளுக்கும் ஏற்ப தனியே கட்டணம் செலுத்த வேண்டும். இந்த சலுகைகளுக்கு தீபாவளி, புத்தாண்டு என விழாக்காலங்களில் தடை விதித்து விடுகின்றன செல்போன் நிறுவனங்கள். அதன் மூலம் அதிக வருவாயை செல்போன் நிறுவனங்கள் பெறுகின்றன. அதன்படி இந்த ஆண்டும் தீபாவளியன்று பூஸ்டர், ரேட்கட்டர் சலுகைகள் செல்லுபடியாகாது என்றும், அன்று பேசுபவர்களுக்கு, எஸ்எம்எஸ் அனுப்புபவர்களுக்கு வழக்கமான கட்டணமே வசூலிக்கப்படும் என்று பிஎஸ்என்எல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து தனது செல்போன் வாடிக்கையாளர்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்பியுள்ளது. மேலும் தகவல் அறிய 1503 என்ற உதவி மைய எண்ணை தொடர்புக்கு கொள்ளலாம். சில செல்போன் நிறுவனங்கள் இதுபோன்ற எந்த தகவலையும் தனது வாடிக்கையாளர்களுக்கு அனுப்பாமல், பூஸ்டர் கட்டணங்களை விழாக்காலங்களில் ரத்து செய்து வருவாய் பார்க்கின்றன.
No comments:
Post a Comment