Monday, 25 November 2013

மாநில அளவில் தேசிய திறனாய்வு முதல்நிலை தேர்வு 98 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதினார்கள்

உதவித்தொகை பெறுவதற்கான தேசிய திறனாய்வுத்தேர்வை எஸ்.எஸ்.எல்.சி. படிக்கும் மாணவர்கள் எழுதினார்கள். மாநில அளவில் நடந்த முதல் நிலைத்தேர்வில் 98 ஆயிரம் பேர் கலந்துகொண்டனர்.

திறனாய்வுத்தேர்வு

இந்தியா முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. படிக்கும் மாணவர்களில் திறமையான மாணவர்களுக்கு அவர்களின் உயர் கல்விபெறும் வரை உதவித்தொகை வழங்கி வருகிறது. இதற்காக ஒவ்வொரு வருடமும் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வு 2 வகையாக நடத்தப்படுகிறது. முதலில் மாநில அளவில் தேர்வு நடத்தப்படும். அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு தேசிய அளவில் தேர்வு நடத்தப்படுகிறது. இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு மத்திய அரசின் உதவித்தொகை வழங்கப்படும்.

98 ஆயிரம் பேர் எழுதினார்கள்

நேற்று தமிழ்நாட்டில் மாநில அளவிலான முதல் நிலைத்தேர்வு நடந்தது. தமிழ்நாடு முழுவதும் 254 மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது. 98 ஆயிரம் மாணவ- மாணவிகள் எழுதினார்கள். காலையில் ஒருதேர்வும் அரை மணிநேர இடைவெளிவிட்டு மற்றொரு தேர்வும் நடத்தப்பட்டது.

சென்னையில் பி.ஏ.கே.பழனிச்சாமி நாடார் பள்ளி, மதரஸா பள்ளி உள்பட 15 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

அடுத்து தேசிய அளவிலான திறனாய்வு நடத்தப்படும்.

தேர்வுக்கான ஏற்பாடுகளை அரசு தேர்வுத்துறை செய்திருந்தது.

No comments:

Post a Comment