திருச்சி கலெக்டர் ஜெயஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:
"திருச்சி மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவியரின் கல்வி மேம்பாடு, தொடர்ந்து கல்வி பயிலும் வகையில் பெண் கல்வி ஊக்குவிப்புத் தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நடப்பு 2013-14ம் கல்வி ஆண்டு முதல் 7ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு பயிலும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவிகளுக்கு ஒரு வருடத்திற்கு 1,500 ரூபாய் வழங்கப்படும். இத்தொகை மாணவிகளின் பெயரில் உள்ள வங்கி கணக்கு அல்லது மாணவிகளின் தாயாரின் பெயரில் தொடங்கப்பட்ட அஞ்சலக சேமிப்பு கணக்கிலேயே தொகை செலுத்தப்படும்.
பெண் கல்வி ஊக்குவிப்புத் தொகை பெறுவதற்கு உயர் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், சம்மந்தப்பட்ட உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் மூலம் விரைவில் விண்ணப்பித்திட வேண்டும்.
பெண் கல்வி உதவித் தொகை பெற தகுதியுள்ள அனைத்து மாணவிகளும் வங்கி கணக்கு கண்டிப்பாக துவங்க வேண்டும்.
பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கான பெண் கல்வி ஊக்குவிப்புத் தொகை கேட்புரிமை பட்டியலை வரும் 30ம் தேதிக்குள் சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனம் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் இக்கல்வி உதவித் தொகை பெறுவது குறித்த சந்தேகங்கள் ஏதேனும் இருந்தால், திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
No comments:
Post a Comment