Sunday, 3 November 2013

குழந்தைத் தொழிலாளர் பள்ளி ஆசிரியர்கள் சம்பளம் இல்லாமல் தவிப்பு

தமிழகத்தில் 16 மாவட்டங்களில் குழந்தை தொழிலாளர் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் ஆறு மாதமாக சம்பளம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.தமிழகத்தில் 9 வயது முதல் 14 வயதிற்குற்பட்ட குழந்தை தொழிலாளர்களை மீட்டு படிக்க வைக்கப்படுகின்றனர். இதற்காக திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, காஞ்சிபுரம், வேலூர், நாமக்கல், சேலம், கோவை, திருவண்ணாமலை, திருவள்ளூர் உட்பட 16 மாவட்டங்களில் குழந்தை தொழிலாளர் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.இதில் ஒவ்வொரு மாவட்டத்திலும் குழந்தை தொழிலாளர் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்களும், பள்ளிகளும் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகளில் வழங்கப்படும் சத்துணவு மூலம் உணவு வழங்கப்படுகிறது.அதே நேரத்தில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு கடந்த ஆறுமாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால் தீபாவளியை கூட சந்தோஷமாக கொண்டாட முடியாமல் குழந்தை தொழிலாளர் பள்ளி ஆசிரியர்கள் அவதிப்பட்டுள்ளனர்.இது குறித்து திட்ட இயக்குனர்(பொறுப்பு) அறிவழகன் கூறியதாவது: "மத்திய அரசு நிதி ஒதுக்கீடு கிடைக்காததால் கடந்த ஆறு மாதமாக சம்பளம் வரவில்லை. இதனால் ஆசிரியர்கள் சோகத்தின் உச்சத்தில் உள்ளனர்" என்றார்.

No comments:

Post a Comment