Wednesday, 27 November 2013

உதவி கல்வி தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடத்தை பதவி உயர்வு பணியிடமாக மாற்றவேணடும்.

உதவி கல்வி தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடத்தை பதவி உயர்வு பணியிடமாக மாற்றவேண்டும் என தமிழ்நாடு உதவி தொடக்கக் கல்வி அலுவலர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருச்சியில் அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் சு.பாலகிருஷ்ணன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநில செயற்குழு கூட்டத்தில் இதற்கான நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: தொடக்கக் கல்வி துறையில் நீதிமன்ற வழக்குகள் அதிகமாக இருப்பதால் மண்டல அளவிலான சட்ட ஆலோசகரை நியமிக்கவேண்டும்.
நீண்ட காலமாக நிலுவையில் பயணப்படியினை உடனடியாக வழங்கவேண்டும். உயர்நிலைப் தலைமை ஆசிரியராக பதவி உயர்வு வழங்கவேண்டும். உதவி தொடக்கக் கல்வி அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்பவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
பொதுச் செயலர் சி. பாஸ்கரன், பொருளாளர் ப. மாதவராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

No comments:

Post a Comment