Thursday, 14 November 2013

மாணவர்களின் புள்ளி விவரங்கள் சரியாக இல்லாததால்,செயல்படுத்துவதில், சிக்கல்கள் ஏற்படுகின்றன.

பள்ளி மாணவர்களின் இடைநிற்றலை தவிர்க்க, அரசு, பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மாணவர்களின் புள்ளி விவரங்கள் சரியாக இல்லாததால், அவற்றை செயல்படுத்துவதில், சிக்கல்கள் ஏற்படுகின்றன.
இதையடுத்து, பள்ளி மாணவர்களுக்கு, "ஸ்மார்ட் கார்டு" வழங்கப்பட உள்ளது. இதற்காக, இ.எம்.ஐ.எஸ்., திட்டத்தில், 2012-13ம் கல்வியாண்டில் ஒன்று முதல் பிளஸ் 2 வரை பயின்ற மாணவர்களின் விவரங்கள், இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டன.
"ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட விவரங்களுடன், மாணவர்களின் ஆதார் அட்டை எண்ணையும், பதிவு செய்ய வேண்டும்" என கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதால், அப்பணி தற்போது துவங்கியுள்ளது. ஆதார் அட்டை பெறாத மாணவர்களுக்கு, ஆதார் அட்டைக்கான விண்ணப்பத்தின் எண் பதிவு செய்யப்படுகிறது.

No comments:

Post a Comment