Sunday, 24 November 2013

பள்ளிக்கு "டிமிக்கி' கொடுக்கும் ஹெச்.எம்.,கள் - தினமலர் செய்திக்கு, தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, நாமக்கல் எதிர்ப்பு

கல்வியாளர்களின் இந்தக் கருத்துக்கு கடுமையான எதிர்ப்பை பதிவு செய்கிறோம். முதலில் மாலையில் தலைமையாசிரியர் கூட்டங்கள் என்பதே அடிப்படையில் தவறானது. மாலை 4 மணிக்கு தலைமை ஆசிரியர் கூட்டங்களை நடத்தும் ஒரு சில அலுவலர்கள் தேவையில்லாமல் கூட்டத்தை ஜவ்வாக இழுத்து 6 அல்லது 7 மணி வரை நடத்துகின்றனர். இதில் நீண்ட தொலைவில் இருந்து வரும் பெண் தலைமையாசிரியர்கள் நிலை மற்றும் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? 

அரசாங்கம் கொடுக்கும் வேலைகள் கொஞ்சநஞ்சமல்ல.. 
இன்றைய சூழலில் யாரும் தலைமைஆசிரியராக வர விரும்பமாட்டார்கள். இரண்டு நாளைக்கு ஒருமுறை H.M MEETING, Particulars, Record maintenance,மக்கள் தொகை கணக்கெடுப்பு, பொருளாதார கணக்கெடுப்பு, தேர்தல் பணி, வாக்காளர் சேர்க்கை/நீக்கல் பணி , வங்கிப்பணி  என ஏராளமான வேலைகள்.


வெளியில் இருந்து சொல்பவர்கள் எல்லாம் அப்பணிகளின் சுமைகளை அறியாதவர்கள். எடுத்துக்காட்டாக EMIS பணியையே எடுத்துக் கொள்ளலாம். விழி பிதுங்குகிறது. முதலில் ஆசிரியர்களுக்கு ஆசிரியப்பணியை மட்டும் வழங்கச் சொல்லிவிட்டு அதன்பின் இதுபோன்ற அர்த்தமற்ற குற்றச்சாட்டுகளை சொல்லச் சொல்லுங்கள். நான்கு சுவர்களுக்குள் அமர்ந்து கொண்டு பிறரை விமர்சிப்பது என்பது யாருக்கும் எளிது. களத்தில் இருக்கும் பிரச்னைகளை நேரிடையாக அறிந்து அதன்பின் கருத்துகளை வெளியிட கருத்தாளர்களுக்கு அறிவுறுத்துங்கள். எனக்கு ஒரு சந்தேகம்.."கருத்துகள் சொல்லும் எந்த கல்வியாளரும் பாடம் சொல்லிக் கொடுத்து நாங்கள் பார்த்ததேயில்லை" களத்தில் உள்ளவர்களின் கருத்துகளை பெற்று பதிவிடுங்கள்



No comments:

Post a Comment