தமிழகத்தில் தொடக்க, நடுநிலைப்பள்ளிகள்,தொடக்க கல்வி இயக்குனர் தலைமையில் நடந்து வருகிறது.மாவட்டத்தில் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்,அவருக்கு கீழ் ஒன்றியங்களில் உதவி தொடக்கக் கல்வி அலுவலகங்களில் 2 உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் ,மாவட்டத்திற்கு அறிவியல், நர்சரி உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் நிர்வாகம் செய்கின்றனர்.
தொடக்க கல்வி இயக்குனர் அலுவலகம் முதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலகங்களில் பணியாளர் பற்றாக்குறை பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது.தொடக்க கல்வி இயக்குனர் அலுவலகத்திலேயே 12 ஆசிரியர்கள் பள்ளிக்கு செல்லாமல் பணியாளர்களாக பணியாற்றுவதாக தகவல்.
அரசு தொடக்க கல்வி நிர்வாகத்தை முழுதும் கணினி மயமாக்கினால் தவிர ஒவ்வொரு மாதமும் செய்திதாள்களில் ஆசிரியர்களுக்கு பணப்பயன் கிடைக்கவில்லை,போராட்டம் ,லஞ்சம் கைது போன்றவற்றை தவிர்க்க இயலாது.
மேலும் ஒரு உதவி தொடக்கக் கல்வி அலுவலகத்திற்கு 3 பணியாளர்,2 அலுவலர்களே போதும்.6 அலுவலர்கள்,ஒரு பி.ஏ,ஒரு மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரே போதும்.
தொடக்ககல்வி இயக்குனர் அலுவலகதிற்கு 2 கோடி மாவட்டதொடக்ககல்வி அலுவலகதிற்கு 25 லட்சம் என 32 அலுவலகதிற்கு ,ஒரு உதவி தொடக்க கல்வி அலுவலகதிற்கு 10 லட்சம் 385 அலுவலகத்ற்கு என ஒருமுறை அரசுசெலவு செய்து அரசு இந் நிர்வாகத்தை முழு கணினி மயமாக்கி,கருவூலம்,பள்ளிகளுடன் முழு வலைதளத்துடன் இணைப்பின் அரசுக்கும்,ஆசிரியருக்கும் நல்லது.மாணவருக்கும் நல்லது.
ஆசிரிய சங்கங்கள் ஊழலை ஒழிக்க இதற்கு வலியுறுத்துங்கள்.
No comments:
Post a Comment