பெரியார் பல்கலை சார்பில் நடத்தப்படும் செமஸ்டர் தேர்வில், முறைகேடுகளை களைய தேர்வுத்துறை மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. வரும் 11ம் தேதி துவங்க உள்ள செமஸ்டர் தேர்வில், புகைப்படத்துடன் கூடிய ஹால் டிக்கெட் வழங்கப்பட உள்ளது.தமிழகத்தில் கல்லூரி கல்வி இயக்குனரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் கல்லூரி, தனியார் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள பல்கலை மூலம் நடத்தப்படுகிறது.தேர்வுகள் நியாயமான முறையில் நடத்த, சில விதிமுறைகள் பின்பற்றப்பட்டு வந்தாலும், அதிகளவு முறைகேடுகள் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. அதனால், முறைகேடுகளை களைய, செமஸ்டர் (பருவத்தேர்வு) தேர்வுகளில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறதுசேலத்தில் செயல்பட்டு வரும் பெரியார் பல்கலை சார்பில் நடத்தப்படும் செமஸ்டர் தேர்வுகளில், சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. கடந்த காலங்களில், செமஸ்டர் தேர்வர்களுக்கு வழங்கப்படும் ஹால் டிக்கெட்களில் தேர்வரின் புகைப்படம் இடம் பெற்றிருக்காது. அதே கல்லூரி மாணவர் (தேர்வர்) என்பதால் அவரது பெயர், பாடம், பாடத்தின் கோடு எண், சேர்க்கை எண், செமஸ்டர், அரியர் என்பது உள்ளிட்ட விவரங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டு வழங்கப்படும்.ஆனால் புதிய நடைமுறைப்படி, செமஸ்டர் தேர்வு எழுதும் மாணவருக்கு, புகைப்படத்துடன் கூடிய ஹால்டிக்கெட் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்காக, பல்கலை கட்டுப்பாட்டில் உள்ள 86 அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் படிக்கும் தேர்வரின் புகைப்படத்துடன் கூடிய பட்டியல் பல்கலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.அதனை பல்கலை தேர்வுத்துறை தணிக்கை செய்து, தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட்டை, சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த காலங்களில், தனித்தனி பேப்பரில் ஹால் டிக்கெட் பிரிண்ட் செய்து வழங்கப்பட்டதில் இருந்து தற்போது மெயில் மூலம் பிரிண்ட் எடுத்து வழங்கும் நடைமுறை அமலுக்கு வருகிறது.பல்கலை பேராசிரியர் ஒருவர் கூறியதாவது: பெரியார் பல்கலை கட்டுப்பாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் நடந்த தேர்வுகளில் நடந்த குளறுபடிகளால், மாணவர்கள் பல பிரச்னைகளை சந்தித்தனர்.அதனால் பல்கலை மூலம் நடத்தப்படும் தேர்வுகள் மீது, மாணவர்களுக்கே நம்பக தன்மை இல்லாமல் இருக்கிறது. அதனை களையும் பொருட்டு தற்போது பல்கலை தேர்வுத் துறை சில மாற்றங்களை செய்து வருகிறது. நவம்பர், 11ம் தேதி துவங்க உள்ள செமஸ்டர் தேர்வில், புகைப்படத்துடன் கூடிய ஹால் டிக்கெட் வழங்கப்பட உள்ளதால், முறைகேடுகள் களைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment