பள்ளி மாணவ, மாணகளின் ஆதார் எண்களை திரட்டி, அவர்களது சுயவிவர குறிப்போடு ஒருங்கிணைக் கும் பணிக்கு தலைமையாசிரியர்கள் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என்று பெரம்பலூர் மாவ ட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகாலிங்கம் வலியுறுத்தியுள்ளார்.
பெரம்பலூர் ரோவர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் பெரம்பலூர் மாவ ட்ட அளவில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான ஆலோச னை கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கல்வி அலுவலர் வெங்கடாஜலபதி முன்னிலை வகித்தார். கூட்டத்திற்கு தலைமை வகித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகாலிங்கம் பேசியதாவது :
தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை உத்தரவுப்படி, ஏற்கனவே துவக்கப் பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளி வரை கல்வி பயிலும் அனைத்து மாணவ, மாணவிகளின் பெயர், வயது, ஊர், வகுப்பு, பெற்றோர், ஜாதி, மதம் உள்ளிட்ட சுய விவரக் குறிப்பு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம், மாவட்ட தொடக் கக் கல்வி அலுவலகம் ஆகியவற்றின் மூலம் இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அதில் தற்போது மாணவ, மாணவிகளின் ஆதார் அட்டை எண்ணை யும் சேர்க்கும் பணியையும், ஏற்கனவே பதிவேற்றம் செய்யப்பட்ட சுய விவர குறிப்புகளில் மாற்றங்கள், திருத்தங்கள் செய்திடும் பணியையும் விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்காக இம் மாவட்டத்திலுள்ள அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள், தங்கள் பள்ளி களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளின் ஆதார் அட்டை எண்களை விரை ந்து சேகரிக்க வேண்டும். அவற்றை உடனடியாக புள்ளி விவரங் களோடு சேர்க்கவும், திருத்தங்களை மேற்கொள்ளவும் முழுமை யாக ஒத்துழைக்க வேண் டும். மேலும், மாணவ, மாணவிகளின் தேர்ச்சி விகிதங்களை அதிகரிக்கவும், பள்ளி தேர்ச்சி விகிதங்களை அதிகரிக்கவும் கடுமையாக உழைக்க வேண்டும் என்றார்.
கூட்டத்தில் முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் காமராஜ், தங்கராஜ் மற்றும் கல்வித் துறை அலுவலர்கள், பள்ளித் தலைமையாசிரியர்கள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment