Saturday, 7 December 2013

வரும் கல்வி ஆண்டுக்கு மே.1ல் மாணவர் சேர்க்கை : தமிழக அரசு உத்தரவு

வரும் கல்வி ஆண்டிற்கு மே மாதம் 1ம் தேதி முதல் தான்  மாணவர் சேர்க்கையை தொடங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அரசின் இந்த உத்தரவை மீறும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு எச்சரித்துள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் 65 ஆயிரம் பள்ளிகள் இயங்கி வருகின்றன. அரசு பள்ளிகளில் மே மாதம் முதல் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. ஆனால் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் டிசம்பருக்குள் மாணவர் சேர்க்கை முடிவதாக புகார் எழுந்தது. தனியார் பள்ளிகள் லாபநோக்கோடு மாணவர் சேர்க்கை நடத்துவதை தடுக்கவும் கோரிக்கை எழுந்தது. இதனையடுத்து தமிழக அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. 

No comments:

Post a Comment