Thursday, 26 December 2013

1.36 கோடி இலவச பாட புத்தகம்: ஜன.2ல் பள்ளிகளில் வினியோகம்


அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்க அச்சிட்ட 1 கோடியே 36 லட்சம் பாட புத்தகங்கள் அனைத்து பள்ளிகளுக்கும் வந்து சேர்ந்தன. ஜனவரி 2ம் தேதி முதல் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளன.மாணவர்களின் புத்தக சுமையை குறைக்க கடந்த ஆண்டு முப்பருவ முறை அறிமுகம் செய்யப்பட்டது. 1 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு 5 பாடங்களையும் சேர்த்து இரண்டே புத்தகங்களாக அச்சிட்டு வழங்கப்பட்டன.  இந்த ஆண்டுக்கான முதல் பருவம், இரண்டாம் பருவம் என 2 பருவங்களுக்கான புத்தகங்கள் அச்சிட்டு வழங்கியுள்ள நிலையில் இப்போது 3ம் பருவத்துக்கான புத்தகங்களை தமிழ்நாடு பாடநூல் கழகம் அச்சிட்டுள்ளது. 9ம் வகுப்புக்கு இந்த ஆண்டு முதல் முப்பருவ முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

முதல் இரண்டு பருவ பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டுவிட்டன. 3ம் பருவத்துக்கான புத்தகங்கள் 3 தொகுதிகளாக அச்சிட்டுள்ளனர்.அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு 3ம் பருவ புத்தகங்கள்(தமிழ் வழி) 1 கோடியே 36 லட்சத்து 62 ஆயிரம் அச்சிடப்பட்டுள்ளன. 6 முதல் 8ம் வகுப்புகளுக்கான 3ம் பருவப் புத்தகங்கள் அனைத்து பள்ளிகளுக்கும் வந்து சேர்ந்தன. வகுப்பு வாரியாக அந்த புத்தகங்களை பிரித்து மாணவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு புத்தகங்கள் வினியோகம் செய்யும் பணியில் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த பணிகள் முடிந்ததும், ஜனவரி 2ம் தேதி பள்ளிகள் திறந்ததும் அனைத்து மாணவர்களுக்கும் புத்தகங்கள் வழங்கப்படும்.

No comments:

Post a Comment