விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கான 3ம் பருவத்திற்கான புத்தகங்களை விநியோகிக்கும் பணி துவங்கியது.
விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி, திண்டிவனம் ஆகிய மூன்று கல்வி மாவட்டங்கள் இயங்கி வருகிறது. பெங்களூரு, ஜதராபாத் மாநிலங்களில் அச்சடிக்கப்பட்ட தமிழக அரசின் பாடத்திட்ட 3ம் பருவத்திற்கான புத்தகங்கள், நேற்று முன்தினம் விழுப்புரத்திற்கு கொண்டு வரப்பட்டது.
விழுப்புரம் கல்வி மாவட்ட அரசு பள்ளிகளுக்கான 45 ஆயிரம் பாடபுத்தகங்கள் நேற்று முன்தினம் சி.இ.ஓ., அலுவலகத்திலிருந்து, விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலை பள்ளிக்கு அனுப்பப் பட்டது. இவற்றை அந்தந்த பள்ளிகளுக்கு பிரித்து விநியோகம் செய்யும் பணி நேற்று பகல் 12:00 மணிக்கு துவங்கியது.
மாவட்ட கல்வி அலுவலர் மாதவன் மேற்பார்வையில், முதற்கட்டமாக 22 ஆயிரம் பாட புத்தகங்களை, 50 பள்ளிகளுக்கு விநியோகம் செய்தனர். மற்ற பள்ளிகளுக்கான புத்தகங்கள் இன்று விநியோகம் செய்யப்படுகிறது.
அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து வரும் 2ம் தேதி பள்ளி துவங்கும் போது, மாணவர்களிடம் 3ம் பருவ பாட புத்தகங்கள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது
No comments:
Post a Comment