Tuesday, 3 December 2013

பள்ளி கல்வித்துறை சார்பில் மாநில அறிவியல் கண்காட்சி - தாம்பரத்தில் 5ம் தேதி தொடக்கம்


தாம்பரத்தில் பள்ளி கல்வி துறை சார்பில் மாநில அளவிலான 41வது அறிவியல் கண்காட்சி வரும் 5ம் தேதி முதல் 3 நாட்கள் நடைபெறுகிறது. தமிழக அரசின் பள்ளி கல்வி துறை சார்பில் மாநில அளவிலான 41வது ஜவஹர்லால் நேரு தேசிய அறிவியல் மற்றும் கணித கண்காட்சி தாம்பரத்தில் உள்ள ஜெய்கோபால் கரோடியா தேசிய மேல்நிலைப்பள்ளியில் வருகிற 5, 6, 7 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.தொடக்க விழாவுக்கு காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் பாஸ்கரன் தலைமை தாங்குகிறார். பள்ளி கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் வரவேற்கிறார். பள்ளி கல்வி துறை அரசு முதன்மை செயலர் சபிதா, கண்காட்சி குறித்து விளக்கவுரையாற்றுகிறார்.  பள்ளி கல்வி துறை அமைச்சர் கே.சி.வீரமணி தொடங்கி வைக்கிறார்.
 
நான்கு பிரிவுகளின் கீழ் கண்காட்சி பொருட்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன. ஓவ்வொரு மாவட்டத்திலும் 4 மாணவர்கள், 3 வழிகாட்டி ஆசிரியாகள்¢ உட்பட 256 பேர் கலந்து கொள்கின்றனர். கண்காட்சியின் மையக்கருத்து அறிவியல் மற்றும் கணிதப்புதுமைகள் என்பதாகும் இதில் விவசாயம், ஆற்றல், உடல்நலம், சுற்றுச்சூழல், வளங்கள் ஆகிய 5 உட்தலைப்புகளில் கண்காட்சி நடைபெறுகிறது. 128 காட்சி பொருட்கள் காட்சிப்படுத்தப்படுகிறது.அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தெரிவு செய்யப்பெற்ற 32 மாணவர்கள், 32 வழிகாட்டி ஆசிரியர்களோடு மாநில அளவிலான கணித கருத்தரங்கில் கலந்து கொள்கிறார்கள். கணித கருத்தரங்கின் மையக்கரு புவிக்கோளின் கணிதம் என்பதாகும்.
 
5 உட்தலைப்புகளிலும் தலைப்பிற்கு 3 பேர் வீதம் 15 பரிசுகள் பெறுபவர்களும் கணித கருத்தரங்கில் முதல் 3 இடங்களை பெறுபவர்களும் டெல்லியில் அமைந்துள்ள தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் நடத்தப்படும் தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சியில் பங்குபெறுவர்.கண்காட்சியை காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் மற்றும் மெட்ரிக் பள்ளிகளைச் சேர்ந்த ஒன்றரை லட்சம் மாணவர்கள் பார்வையிட உள்ளனர். கண்காட்சியில் பங்குபெறும் மாணவர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. பார்வையிட வரும் மாணவர்களுக்கு பஸ் வசதியும் செய்யப்பட்டுள்ளது.கண்காட்சி நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள என்றwww.ceokanchipuram.in இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.இந்த தகவலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாந்தி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment