திருவெறும்பூர் செல்வபுரத்தை சேர்ந்தவர் சங்கரலிங்கம். ஜூஸ் வியாபாரி. இவரது மகள் ஜாஸ்மின் (15). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். உடல்நலம் சரியில்லாததால் கடந்த 2 நாட்களாக பள்ளிக்கு ஜாஸ்மின் செல்லவில்லை.
இந்நிலையில் நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் பள்ளிக்கு சென்றார். அனுமதியின்றி 2 நாள் ஏன் விடுமுறை எடுத்தாய் என்று வகுப்பு ஆசிரியை கண்டித்து இதற்கு தண்டனையாக வகுப்புக்கு வெளியே ஜாஸ்மின் நிறுத்தப்பட்டார்.
இதனால் மனமுடைந்த ஜாஸ்மின், பள்ளியின் 2வது மாடிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்தார். இதில் அவர் தரையில் விழாமல் மாடி சன்ஷேடில் விழுந்ததால் படுகாயத்துடன் தப்பினார். பின்னர் அங்கிருந்து அவரால் எழுந்திருக்க முடியாமல் மயங்கிய நிலையில் கிடந்தார்.
இதையடுத்து மாணவிகள் துணையுடன் ஆசிரியைகள் உடனடியாக ஜாஸ்மினை மீட்டு பெல் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்த சம்பவம் ஆசிரியைகள் மற்றும் மாணவிகள்
மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:
Post a Comment