Monday, 2 December 2013

ஆசிரியர்களை அலுவலகப் பணியில் ஈடுபடுத்துவதற்கு கண்டனம்

கீழையூர் உதவித் தொடக்கக் கல்வி அலுவலகப் பணியில், பள்ளி வேலை நேரத்தில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவதற்கு  தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்தக் கூட்டணியின் நாகை மாவட்டப் பொதுக் குழுக் கூட்டம், நாகையில் அண்மையில் நடைபெற்றது.  சங்கத்தின் மாவட்டத் தலைவர் ப. முருகபாஸ்கரன் தலைமை வகித்தார். மாநிலத் துணைத் தலைவர் இரா. முத்துகிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் மு. லெட்சுமிநாராயணன், மாநிலப் பொதுக் குழு உறுப்பினர்கள் தங்க. மோகன், சி. பிரபா, பி. பன்னீர்செல்வம் ஆகியோர் பேசினர். வட்டாரச் செயலாளர் கி. பாலசண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :  பள்ளி வேலை நேரத்தில் ஆசிரியர்களை அலுவலகப் பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது என மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் வெளியிட்ட உத்தரவை மீறி, கீழையூர் உதவித் தொடக்கக் கல்வி அலுவலகத்தில் பள்ளி வேலை நேரத்தில் ஆசிரியர்கள் அலுவலகப் பணிக்குப் பயன்படுத்தப்படுவதற்குக் கண்டனம் தெரிவிப்பது. 
இ.ஐ.எம்.எஸ் படிவத்தில் மாணவர்களின் புகைப்படத்தை இணைக்கும் பணிக்குத் தலைமை ஆசிரியர்களை வற்புறுத்தாமல், பிற மாவட்டங்களைப் போல இப்பணிக்கு ஆசிரியர் பயிற்றுநர்களைப் பயன்படுத்த வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரைக் கேட்டுக் கொள்வது.
மாநில அமைப்பின் முடிவை ஏற்று அனைத்து ஆசிரியர்களும், கூட்டு நடவடிக்கைக் குழுவில் பங்கேற்பது. தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் முன்னாள் மாநிலத் தலைவர் வீ.மா. பெரியசாமியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பது என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments:

Post a Comment