Tuesday, 10 December 2013

பொதுத்தேர்வுக்கான நேரத்தை மாற்றாதீர்கள் - பள்ளி மாணவர் மாநாடு வலியுறுத்தல்


அரசு பொதுத்தேர்வுக் கான நேரத்தை மாற்றிய மைக்கக்கூடாது என இந் திய மாணவர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற பள்ளி மாணவர்கள் கோரிக்கை மாநாடு தமிழக அரசை வலியுறுத்தி உள்ளது.

கோவை ரயில் நிலையம் அருகில் உள்ள அண்ணா மலை அரங்கத்தில் பள்ளி மாணவர்கள் கோரிக்கை மாநாடு மாணவர் சங்கத் தின் கோவை மாவட்ட தலைவர் நிஷார் அகமது தலைமையில் ஞாயிறன்று நடைபெற்றது. வரவேற் புரையை ராஜேந்திரன் நிகழ்த்தினார். இம்மாநாட்டில் கீழ்கண்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. சமீபத்தில் அரசு அரசு பொதுத்தேர்வுகள் காலை 9.15 மணிக்கு துவங் கும் என்று அறிவிக்கப்பட் டுள்ளது. இது ஏற்கத்தக்க தல்ல பொது போக்குவரத்து போதுமானதாக இல்லாதபோது அரசு அறிவித்த இந்த நேரம் மாணவர்களை பரபரப்புக்கு உள்ளாக்கும்.

தேவையற்ற மனஉலைச்சலைஉருவாக்கும். கடந்த காலங்களை போலவே தேர்வுகள் காலை 10 மணிக்கு துவங்க உத்தரவிட வேண்டும். கோ வையில் மாணவிகளுக்கு என தனி அரசுக்கல்லூரி அமைக்கப்பட வேண் டும். அரசாணை 92- ன் படி அனைத்து கல்வி நிலையங்களிலும் எஸ்.சி., எஸ்.டி மாணவர்களுக்கான இலவச கல்வி முறையை கட்டாயம் பின்பற்ற அரசு கண்காணிக்க வேண்டும். தனியார் பள்ளிகளில் கட் டணக்கொள்ளையை தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண் டும் உள்ளிட்ட தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக மாணவர் சங்க கோவை மாவட்ட செயலாளர் தீபக்சந்திரகாந்த் துவக்க உரையாற்றினார். மா நாட்டை வாழ்த்தி வாலிபர் சங்க கோவை மாவட்ட செயலாளர் ஜே.ரவீந்திரன் உரையாற்றினார். கவிஞர் உமாமகேஷ்வரிசிறப்புரையாற் றினார். மாநாட்டை நிறைவு செய்து மாணவர் சங்கத்தின் மாநிலத்தலைவர் உச்சி மாகாளி பேசினார். முன்னதாக கோவை அர சுப்பள்ளிகளில் பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களைபிடித்த மாணவ மாணவி களுக்கு பாராட்டு மற்றும் பரிசளிப்பு நடை பெற்றது.

மாநாட்டில் மாண வர்சங்க மாவட்ட இணைச்செயலாளர் ரஜேந்திரனை கன்வீனராக கொண்டு 16 பேர் கொண்ட உபக்குழு அமைக்கப்பட்டது. மாநா ட்டில் 300க்கும் மேற் பட்ட மாணவ-மாணவிகள்கலந்து கொண்டனர். நிறைவாக மா ணவர் சங்க மாவட்டக்குழு சுமேஷ் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment