பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தனது Optional proficiency தேர்வை, அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் 14 முதல் 18ம் தேதி வரை CBSE நடத்துகிறது. 2014ம் ஆண்டு மார்ச்சில், பத்தாம் வகுப்பு இறுதியாண்டு தேர்வை எழுதும் மாணவர்களுக்கானது இத்தேர்வு.
மாணவர்களின் திறன்கள் மற்றும் ஆரோக்கிய மனநிலையை அளவிடுவது, படிப்பில் சிறந்து விளங்கும் வகையில் அவர்களை ஊக்குவிப்பது, மாணவர்களின் நிலை குறித்து சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு தெரிவித்து, தகுந்த செயல்பாடுகளை மேற்கொள்ள ஆலோசனை வழங்குவது போன்ற பலவற்றை தனது நோக்கங்களாக இத்தேர்வு கொண்டுள்ளது.
இத்தேர்வு, பத்தாம் வகுப்பில் ஒரு CBSE வாரிய மாணவர் படிக்கும் 5 முக்கியப் பாடங்களிலும் நடத்தப்படும். ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனி தேர்வு உண்டு. ஒரு நாளைக்கு ஒரு தேர்வு நடத்தப்படும். இது பேப்பர் - பேனா அடிப்படையிலான ஒரு தேர்வு.
ஒவ்வொரு தேர்வுக்கு 2.5 மணிநேரம் ஒதுக்குவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இத்தேர்வில் நெகடிவ் மதிப்பெண் உண்டு. ஒவ்வொரு பாடத்திற்கும் மொத்தம் 100 மதிப்பெண்கள். கேள்விகள், 9 மற்றும் 10ம் வகுப்பு பாடத்திட்டங்களின் அடிப்படையில் இருக்கும்.
இத்தேர்வுக்கான விண்ணப்பங்களை டிசம்பர் இறுதிவரை சமர்ப்பிக்கலாம்.
தேர்வு தேதி விபரங்கள்
ஏப்ரல் 14 - ஆங்கிலம்
ஏப்ரல் 15 - கணிதம்
ஏப்ரல் 16 - அறிவியல்
ஏப்ரல் 17 - சமூக அறிவியல்
ஏப்ரல் 18 - இந்தி.
No comments:
Post a Comment