Thursday, 5 December 2013

தலைமை ஆசிரியர்களுக்கு கணினி பயிற்சி


முசிறி கல்வி மாவட்ட அளவில் 10 மற்றும் 12ம் வகுப்பில் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பெயர் பட்டியல் தயார் செய்வது தொடர்பாக கணினி மென் பொருள் குறித்த பயிற்சி தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது. முசிறி அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற பயிற்சி வகுப்பிற்கு முசிறி கல்வி மாவட்ட அலுவலர் பார்த்திபன் தலைமை வகித்தார். முசிறி அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சேதுராமன் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர்கள் நாராயணசாமி, சந்திரசேகரன் ஆகியோர் தலைமையாசிரியர்களுக்கு பெயர் பட்டியல் தயார் செய்வது குறித்த பயிற்சிகளை படக்காட்சி மூலம் விரிவாக கூறினர். 
முன்னதாக தொட்டியம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் நாச்சி வரவேற்றார். நாகையநல்லூர் அரசு உயர் நிலைப்பள்ளி தலைமையாசிரியர் செல்வராஜ் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment