Sunday, 15 December 2013

தமிழக பல்கலைக்கழகங்களில் ஒரே மாதிரியான பாடத்திட்டம்

தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே மாதிரியான பாடத்திட்டத்தை அரசு கொண்டுவர உள்ளது. இதற்காக கல்வியாளர்கள், பேராசிரியர்கள் தலைமையில் விரைவில் கமிட்டிகள் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு உயர் கல்வி கவுன்சில் உறுப்பினர்-செயலர் கரு.நாகராஜன் தெரிவித்தார்.

ஒன்றாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான பாடத்திட்டம் உள்ளது. இதேபோல் தமிழகம் முழுவதும் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே மாதிரியான பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசு உறுதிபூண்டுள்ளது.

இந்த திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக நிபுணர்கள், கல்வியாளர்கள், பேராசிரியர்கள், துறைத்தலைவர்கள் ஆகியோர் தலைமையில் விரைவில் தனித்தனி கமிட்டிகள் அமைக்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment