தமிழகத்தில் உள்ள தொடக்க கல்வி அலுவலகங்களில் பணி யா ளர் பற்றாக்குறையால் ஆசிரியர்களே அலுவல் பணி களை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் பள்ளி மாணவர்கள் பாடம் கற் பிக்க ஆசிரியர்கள் இன்றி பரிதவிக்கின்றனர்.
தமிழகத்தில் தொடக்க கல்வியில் மாணவர்களின் தரத்தை உயர்த்த அரசு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. இந்த திட்டப் பணிகளை அந்தந்தப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளிக் கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் செய்து வருகின்றனர்.
இந்தப் பணியானது மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு கூடுதல் பணியாக உள்ளது. இந்நிலையில், அவர்கள் தற்போது மற்றொரு பணிச் சுமைக்கு ஆளாகியுள்ளனர். தமிழகம் முழுவதும் உள்ள தொடக்கக் கல்வி அலுவலகங்களில் ஏற்பட்டுள்ள அலுவலர் மற்றும் பணியாளர் பற்றாக்குறையால் அவர்கள் மேற்கொள்ள வேண்டிய அலுவல் பணிகளையும் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களே செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படும் சூழல் உருவாகி வருகிறது. இத னால் அவர்கள் பரிதவிக்கின்றனர்.
ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பணப் பலன், பதவி உயர்வு, ஓய்வூதியம், பணி மாறுதல் போன்றவற் றை அவர்களுக்கு பெற்றுத் தரும் பணிகளை உதவித் தொடக்கக் கல்வி, மாவட்ட தொடக்க கல்வி, அனை வருக்கும் கல்வி இயக்கம் உள்ளிட்ட கல்வித் துறை அலுவலகங்களில் நிர்வாக அலுவலர்கள் செய்து வந்த னர். இதில் பெரும்பாலான இடங்களில் காலியாக உள்ள பணியிடங்கள் முழு மையாக நிரப்பப்படாத நிலை இன்னும் இருந்து வருவதாகக் கூறப்படுகிறது.
தமிழகம் முழுவதும் உள்ள உதவித் தொடக்க கல்வி அலுவலகங்களில் மட்டும் 2 ஆயிரத்து 500க் கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் இங்குள்ள நிர் வாக அலுவலர்கள் கல்வித் துறை சம்பந்தப்பட்ட பணி களை சரியான நேரத்தில் செய்து முடிக்க போதிய அலுவலர்கள் இன்றி திண்டாடுகின்றனர்.
இதனால், ஆசிரியர்களுக்கான பணப் பலன், பதவி உயர்வு, ஓய்வூதியம், பணி மாறுதல் போன்ற பல்வேறு பணிகள் நிலுவையிலேயே இருந்து வருகின் றன. இதன் காரணமாக ஆசிரியர்கள் தங்களது தேவை களை நிறைவேற்றக் கோரி ஆர்ப்பாட்டங்களில் ஈடுப டும் சூழல் உருவாகி றது.
இதனிடையே, ஆசிரியர்களின் குறைகளை தீர்த்து வைக்கும் விதமாக மாதத்தின் முதல் சனிக்கிழமை தோறும் அந்தந்தப் பகுதி உதவித் தொடக்க கல்வி அலுவலகத்தில் குறை தீர்க்கும் கூட்டம் நடத்தப்படுகிறது.
இதில் தீர்க்கப்படாத பிரச்னைகளுக்கு 2ம் சனிக்கிழமை தோறும் அந்தந்த மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்தில் நடை பெறும் கூட்டத்தில் தீர்வு காணப்படுகிறது.
இதுபோன்ற குறைதீர்க் கும் கூட்டங்கள் மாவட்டம் தோறும் நடத்தப்பட்டா லும் ஆசிரியர்களின் குறை கள் இன்னும் தீர்க்கப்படாத நிலை தான் உள்ளது. இதற்கு காரணம் அந்தந்த அலுவலகங்களில் நிலவும் பணியாளர்கள் பற்றாக்குறையே என்று தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செய லாளர் ரெங்கராஜன் கரு த்து தெரிவித்துள்ளார். மேலும், இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்புவதோடு, தேவை ப்படும் பணியிடங்களையும் புதிதாக ஏற்படுத்தி நியம னம் செய்ய வேண்டும் என் றார்.
No comments:
Post a Comment