Wednesday, 22 January 2014

மாவட்டம்தோறும் ஆய்வுக் கூட்டம் இந்தாண்டு 10, பிளஸ் 2 தேர்வில் 90 சதவீதத்துக்கு மேல் தேர்ச்சி-பள்ளி கல்வி செயலாளர் உறுதி


 பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வுகளில் இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் 90 சதவீதத்துக்கும் மேல் தேர்ச்சியை எட்ட  பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக முதன்மை செயலாளர் சபீதா தெரிவித்துள்ளார். சேத்துப்பட்டு எம்சிசி பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 27வது அறிவியல் கண்காட்சி நேற்று முன்தினம்  தொடங்கியது. பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வீரமணி கண்காட்சியை தொடங்கி வைத்தார். தொடக்க விழாவில் பெங்களூர்  விஸ்வேஸ்வரய்யா தொழில் மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியக இயக்குநர் குமார் பங்கேற்றார். விழா வில் பள்ளிக் கல்வித்துறை முதன் மைச் செயலாளர் சபீதா பேசியதாவது: பள்ளிக் கல்வித்தரத்தை உயர்த்த கடந்த 2011-12ம் ஆண்டில் 49 ஆயிரத்து 369 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். 10 ஆயிரம் ஆசிரியர் அல் லாத பணியிடங்களும் நிரப்பப்பட்டன. அதைத் தொடர்ந்து 2012-13ம் ஆண்டில் 13 ஆயிரத்து 756 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். 

இதுவரை 51 ஆயிரத்து 757 ஆசிரியர்களும், 7275 ஆசிரியர் அல்லாத பணியிடங்களும் நிரப்பப்பட்டுள்ளன. மேலும் ‘தமிழக தொலைநோக்கு- 2023’ என்ற இலக்கை அடைய அரசு பல்வேறு கட்டமைப்பு வசதிகளை செய்து வருகிறது. இதற்காக ரூ2098.66 கோடியை அரசு ஒதுக்கியுள் ளது. மாணவர்களுக்கு இலவச நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது. கல்வியின் தரம், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொது த்தேர்வுகளில் அதிகரித்து வருகிறது. பத்தாம் வகுப்பு தேர்வில் கடந்த 2010-11ல் 85.30 சதவீதம், 2012-13ல் 86.20 சதவீதம், 2013-14ல் 89.00  சதவீதம் தேர்ச்சி உயர்ந்துள்ளது. அதேபோல பிளஸ் 2 தேர்வில் கடந்த 2010-11ல் 85.90 சதவீதம், 2012-13ல் 86.70 சதவீதம், 2013-14ல் 88.10 சதவீதம் தேர்ச்சி உயர்ந்துள்ளது.  இதைத் தொடர்ந்து இந்த ஆண்டு தேர்வுகளில் 90 சதவீதத் துக்கும் மேல் தேர்ச்சி அதிகரிக்க மாவட்டந்தோறும் ஆய்வுக் கூட்டம் நடத்தப்ப ட்டு வருகிறது. இதன் மூலம் இந்தாண்டும் தேர்ச்சி சதவீதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றை தொடர்ந்து தமிழகத்தில் விளையாட்டு போட்டிகள், அறிவியல் கண்காட்சி நடத்தவும் அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்பேரில் 5  நாட்கள் இந்த கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் 5 மாநிலங்களை சேர்ந்த பள்ளிகள், கல்வி நிறுவனங்கள் பங்கேற்கின்றன.  500 பொருட்கள் காட் சிக்கு வைக்கப்பட உள்ளது. முதல் நாளில் 220 பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. அடுத்தடுத்த நாட்களில் மற்றவையும்  இடம்பெற உள்ளன. 

No comments:

Post a Comment