Tuesday, 21 January 2014

ஆசிரியர் தேர்வில் 19,000 பேர் தேர்ச்சி மாநிலம் முழுவதும் சான்று சரிபார்ப்பு பணி தொடங்கியது

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்று சரிபார்ப்பு பணி நேற்று தொடங்கியது. அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களை  நியமனம் செய்வதற்கான தகுதித் தேர்வு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 17 மற்றும் 18ம் தேதிகளில் நடந்தது. தாள் 1ல் 2 லட்சத்து 66 ஆயிரம் மாணவ  மாணவிகளும், தாள் 2ல் 4 லட்சத்து 19 ஆயிரம் பட்டதாரிகளும் தேர்வு எழுதினர். மேற்கண்ட இரண்டு தேர்விலும் 19 ஆயிரம் பேர் தேர்ச்சி  பெற்றனர். இவர்களுக்கான, சான்று சரிபார்ப்பு 32 மாவட்டங்களில் நேற்று தொடங்கியது. இப்பணியை கண்காணிக்க 20 இணை இயக்குநர்கள்  நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், 80 போர்டுகள் அமைக்கப்பட்டு ஒரு போர்டில் 30 பேருக்கு சான்று சரிபார்க்கப்பட்டது. இதன்படி, தாள் 1ல் தேர்ச்சி  பெற்ற 2400 பேர் சான்று சரிபார்ப்புக்கு நேற்று அழைக்கப்பட்டிருந்தனர். சில மாவட்டங்களில் இன்று, தாள் 2க்கான சான்று சரிபார்ப்பு தொடங்க  உள்ளன. இன்றும் 2400 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். முதல்நாள் கலந்துகொள்ள இயலாதவர்கள், 27ம் தேதிவரை நடக்கும் சான்று சரிபார்ப்பில்  பங்கேற்கலாம். அதற்கு பிறகு வருவோருக்கு சான்று சரிபார்க்கப்படமாட்டாது என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment