Friday, 3 January 2014

அரசு ஊழியர்கள் உற்சாகம் பொங்கல் பண்டிகைக்கு ஒரு நாள் லீவு போட்டால் 9 நாட்கள் விடுமுறை


அடுத்தடுத்து 9 நாட்கள் வரை விடுமுறை வரும் வகையில் பொங்கல் பண்டிகை தேதிகள் அமைந்துள்ளது. பொதுவாக பொங்கல் பண்டிகைக்கு தமிழ் மாதமான தை மாதம் 1ம் தேதி பொங்கல் தினத்தன்றும், மறுநாள் திருவள்ளுவர் தினம், அடுத்து வரும் நாள் உழவர் திருநாளாகவும் என 3 நாட்கள் விடுமுறை கிடைக்கும். இந்த விடுமுறை நாட்கள் சனி, ஞாயிற்றுகிழமைகளில் வந்தால் விடுமுறை நாட்கள் பறிபோய்விடும். ஆனால் இந்த முறை வாரத்தின் நடுப்பகுதியில் வருவதால் அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் வருகின்றன.

அந்த வகையில் இந்த முறை அதிர்ஷ்டம் அடித்தது போன்று ஒரு நாள் விடுமுறை எடுத்தால் ஒன்பது நாட்கள் விடுமுறை கிடைக்கும் வகையில் உள்ளது. 11,12ம் தேதிகள் சனி, ஞாயிற்றுகிழமை வழக்கமான விடுமுறை நாட்கள். 13ம் தேதி திங்கள்கிழமை போகி பண்டிகையன்று விடுமுறை எடுக்க வேண்டும். 14ம் தேதி பொங்கல், 15ம் தேதி திருவள்ளுவர் தினம், 16ம் தேதி உழவர் திருநாள், 17ம் தேதி வெள்ளிக்கிழமை நாகர்கோவில் நாகராஜா கோயில் தேரோட்டத்தையொட்டி குமரி மாவட்டத்திற்கு  உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

மறுநாள் 19ம் தேதி சனி, 20ம் தேதி ஞாயிறு வழக்கமான விடுமுறை நாட்கள் வந்துவிடுகிறது. அந்த வகையில் ஒரு நாள் விடுமுறை எடுத்தால் 9 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

No comments:

Post a Comment