நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) சார்பில், 37வது சென்னை புத்தக கண்காட்சி நடந்து வருகிறது. கண்காட்சியில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்கள் குவிக்கப்பட்டு ள்ளன. 700 அரங்குகளும் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. புத்தகங்கள் சலுகை விலையில் விற்கப்படுவதால், சென்னைவாசிகள் மட்டுமி ன்றி, வெளி மாவட்டங்களை சேர்ந்த பலரும் புத்தகங்களை வாங்கி செல்கின்றனர். நாளை மறுநாளோடு கண்காட்சி நிறைவு பெறுகிறது. நேற்று விடுமுறை தினம் என்பதால் வழக்கத்தை விட கூட்டம் அதிகம் காணப்பட்டது. பெற்றோருடன் வந்த மாணவர்கள் தங்களுக்கு தேவையான புத்தகங்களை அதிகளவில் வாங்கிச் சென்றனர். தினகரன் குழுமம் சார்பில் பங்கு பெற்றுள்ள சூரியன் பதிப்பகத்தில் (அரங்கு எண்.22) முரசொலி மாறன் எழுதிய திராவிட இயக்க வரலாறு, மாநில சுயாட்சி உள்பட பல புத்தகங்களை வாசகர்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்
No comments:
Post a Comment