நாகையில், நான்கு, சத்துணவு அரிசி மூட்டைகளை, பதுக்கி வைத்திருந்த, சத்துணவு அமைப்பாளரை, போலீசார் கைது செய்தனர். நாகையில், பள்ளி குழந்தைகளின் மதிய உணவிற்காக, அரசால் வழங்கப்படும், பொது வினியோக திட்ட அரிசி மூட்டைகள் கடத்தப்படுவதாக, ஆட்சியர் முனுசாமிக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, ஆட்சியர் உத்தரவுப்படி, நாகை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர், சுபாஷ் சந்திரபோஸ் தலைமையிலான போலீசார், தலைஞாயிறு அடுத்த பிரிஞ்சுமூலை பகுதியில், சோதனை நடத்தினர். பிரிஞ்சுமூலை அரசு துவக்கப் பள்ளியில், சத்துணவு அமைப்பாளராக பணியில் இருக்கும், ராமலிங்கம், 57, தனது வீட்டில், பொது வினியோகத் திட்டத்திற்கான, நான்கு அரிசி மூட்டையை, வெளி மார்க்கெட்டில், விற்பனை செய்வதற்காக, பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.இதையடுத்து, போலீசார், நான்கு அரிசி மூட்டைகளை, பறிமுதல் செய்து, ராமலிங்கத்தை கைது செய்தனர்.
No comments:
Post a Comment