Tuesday, 28 January 2014

தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில்,மாநில விளையாட்டுப் போட்டிகள்: மதுரையில் இன்று துவக்கம்

தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில், மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் இன்று (ஜன.,28), மாநில குடியரசு தின விளையாட்டுப் போட்டிகள் துவங்குகின்றன. ஜன., 30 வரை போட்டிகள் நடக்கின்றன.

வாலிபால், கால்பந்து, கூடைபந்து உட்பட 15 விளையாட்டுக்களின் வீரர், வீராங்கனைகள் 4,500 பேர் மதுரை வருகின்றனர். இவர்கள் 18 பள்ளிகளில் தங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வெளிமாவட்டங்களில் இருந்து மதுரை வரும் வீரர், வீராங்கனைகளை வரவேற்க, ரயில்வே ஸ்டேஷன், ஆரப்பாளையம், பெரியார் மற்றும் மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட்களில் இருந்து ரேஸ்கோர்ஸ் மைதானத்திற்கு அழைத்துவர பள்ளிகளின் பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. துவக்கவிழா, ஷட்டில், டென்னிஸ், கூடைபந்து, கபடி போட்டிகள் ரேஸ்கோர்ஸ் மைதானத்திலும், மீதி விளையாட்டுகள் பிற பள்ளி மைதானங்களிலும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, முதன்மை கல்வி அலுவலர் அமுதவல்லி, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் பரமேஸ்வரி செய்துள்ளனர். 20க்கும் மேற்பட்ட பள்ளிகளில் போட்டிகள் நடப்பதாலும், வீரர்கள் தங்க ஏற்பாடு செய்துள்ளதாலும், மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும், ஜன., 28 முதல் 30 வரை, உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment