Friday, 17 January 2014

பள்ளி மாணவியை கடித்த பாம்புடன் ஆஸ்பத்திரிக்கு வந்ததால் பரபரப்பு

 திருச்சி எடமலைப்பட்டிபுதூர் ஆர்.எம்.எஸ். காலனி பகுதியை சேர்ந்தவர் கீரேக். இவரது மகள் அனிட்டா (வயது 12). இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 6–ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் அனிட்டா நேற்று இரவு டியூசன் சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். வீட்டிற்கு அருகில் வந்த போது அவரை அந்த பகுதியில் இருந்த பாம்பு கடித்தது. இதனால் வலி தாங்க முடியாமல் அவர் அலறினார். இதை கண்ட அனிட்டாவின் உறவினர்கள் உடனடியாக பாம்பை அடித்து அவரை மீட்டனர். பின்னர் அனிட்டாவையும், இறந்த பாம்பையும் எடுத்துக்கொண்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு வந்தனர். பாம்புடன் மருத்துவமனைக்கு வந்தவர்களை பார்த்து அந்த பகுதியில் நின்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அனிட்டாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

No comments:

Post a Comment