பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபர் தப்பியோடினார். நாகை மாவட்டம் சீர்காழி அடுத்த கொண்டல் கிராமத்தில் அரசு ஆதிதிராவிட ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி செயல்படுகிறது. இந்த பள்ளியில் 167 மாணவர்கள் படித்து வந்தனர். இங்கு தலைமையாசிரியராக குணசேகரன் என்பவரும், துணை தலைமை ஆசிரியராக சுபாஷ் சந்திர போஸ் என்பவரும் பணியாற்றினர். இந்த பள்ளியில் இவர்கள் இரண்டு பேர் மட்டுமே ஆசிரியர்களாக பணியாற்றி வந்தனர். இதனையடுத்து தங்களுக்கு <உதவியாக அதேஊரை சேர்ந்த 10ம் வகுப்பு படித்த மூவேந்தன் என்பவரை வைத்திருந்தனர். மூவந்தனர், அப்பள்ளியில் படித்து வந்த பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதில் பாதிக்கப்பட்ட 3ம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவர் தனது பெற்றோரிடம், புகார் கூறியுளளார். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் பள்ளியில் வந்து விசாரித்துள்ளனர். இதனையறிந்த ஊர்மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதுடன், பள்ளியை முற்றுகையிட்டனர். இதனையறிந்த மூவேந்தன் தலைமறைவானார். சம்பவம் குறித்து போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment