Friday, 10 January 2014

ஆசிரியரை செருப்பால் அடித்த தலைமை ஆசிரியை "சஸ்பெண்ட்'


ஆசிரியரை செருப்பால் அடித்த, தலைமை ஆசிரியை, சூசஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
தர்மபுரி மாவட்டம், அரூரை அடுத்த, எஸ்.பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில், கலையரசன், 52, என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர், தலைமை ஆசிரியை செல்வராணி, 50, மீது, கடந்த, 6 ம் தேதி, அரூர் போலீசில் ஒரு புகார் கொடுத்தார். வருகை பதிவேடு குறிக்கவில்லை எனக் கேட்டு, தகாத வார்த்தையால் திட்டி, செருப்பால் அடித்ததாக, அதில் தெரிவித்திருந்தார். "விடைத்தாள்களை சரியாக திருத்தாதது குறித்து கேட்ட போது, கலையரசன் தகாத வார்த்தைகளால் திட்டினார்' என, செல்வராணியும், போலீசில் புகார் கொடுத்தார். அரூர் போலீசார், செல்வராணி மீது, நேற்று முன்தினம் இரவு, வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து, அவரை சஸ்பெண்ட் செய்து, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment