Monday, 27 January 2014

"பான்கார்டு' வாங்க விதிமுறை கடுமையாகிறது


வருமான வரி துறையின், "பான்கார்டு' வாங்குவதற்கான விதிமுறை கடுமையாகிறது.
நிதி பரிவர்த்தனை நிரந்தர கணக்கு எண் எனப்படும், "பான்கார்டு', வருமான வரி செலுத்துவோருக்கு மட்டுமின்றி, இதர நிதி சார்ந்த அனைத்து பரி வர்த்தனைகளுக்கும் அத்தியா வசியமாக உள்ளது. தற்போது, "பான்கார்டு' கோருவோர், அதற்கான விண்ணப்பத்துடன், தங்களின் அடையாளம் மற்றும் வசிப்பிட சான்று நகல்களை அளித்தால் போதுமானது. இனி, இவர்கள், விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் போது, அடையாளம் மற்றும் வசிப்பிட சான்றுகளின் அசல் ஆவணங்களையும் அளிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட அலுவலர், அந்த அவணங்களை சரிபார்த்து விட்டு திரும்ப அளித்து விடுவார். அதன் பிறகே, "பான்கார்டு' விண்ணப்பம் ஏற்கப்படும். 

பிப்ரவரி 3 முதல் அமல் : இந்த புதிய விதிமுறை, வரும் பிப்ரவரி, 3ம் தேதி முதல், அமலுக்கு வருகிறது என, நிதி அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஒரு சிலர், போலியான சான்றுகளை அளித்து, "பான்கார்டு' பெற்று வருவது, அரசின் கவனத்திற்கு வந்துள்ளது. இத்தகைய முறையில், வரி ஏய்ப்பு நடைபெறுவதை தடுக்கும் நோக்குடன், "பான்கார்டு' விதிமுறை கடுமையாக்கப்பட்டுள்ளதாக, அந்த அதிகாரி மேலும் கூறினார்.

No comments:

Post a Comment