Thursday, 30 January 2014

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வது எப்படி?

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி, ஜூலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும். இதையொட்டி மாநில அரசும் தனது ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி வழங்கும். கடைசியாக கடந்த 2013 ஜூலை  முதல் 80 சதவீதமாக இருந்த அகவிலைப்படியை 10 சதவீதம் அதிகரித்து தற்போது 90 சதவீதமாக இரு அரசு ஊழியர்களும் பெற்று வருகின்றனர். இனி 2014 ஜனவரி மாத அடிப்படையில் அகவிலைப் படியை அறிவிக்க வேண்டும்.  இதன்படி இம்மாத இறுதியில், நுகர்வோர் விலைக்குறியீட்டு எண் அடிப்படையில், மத்திய அரசு 10 அல்லது 11 சதவீத அகவிலைப்படியை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்தொகையை  ஜனவரி  முதல் நிலுவையாக வைத்து வழங்கும். இதையடுத்து மாநில அரசும் அகவிலைப்படி உயர்வை  மார்ச்சில்  அறிவித்து, ஏப்ரலில்  3 மாத நிலுவையுடன் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது .

அகவிலைப்படி கணக்கீடு எப்படி:





ஊழியர்களின் அடிப்படை சம்பளத்துடன் அரசு அறிவிக்கும் அகவிலைப்படி கணிசமான தொகையாக கிடைக்கிறது. இதை நிர்ணயிப்பதற்கென ஒரு பார்முலா உள்ளது. அதனடிப்படையில் கணக்கிட்டு 6 மாதங்களுக்கு ஒருமுறை அடிப்படை சம்பளம் வழங்குகின்றனர். கடந்த 12 மாதத்தில், தேசிய அளவிலான நுகர்வோர் விலைப்புள்ளியின் சராசரியை கணக்கிட்டு, அதில் 115.76 என்ற நிர்ணயிக்கப்பட்ட ஒரு எண்ணை கழிக்கின்றனர். அதில் கிடைக்கும் எண்ணை 100 ஆல் பெருக்குவர். அத்தொகையை மீண்டும் 115.76ஆல் வகுப்பர். இதையே, அகவிலை படியாக கணக்கிடுகின்றனர். இதுவே அகவிலைப்படி கணக்கிடும் முறை.

1 comment:

  1. Welcome To Www.Trstrichy.Blogspot.Com: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வது எப்படி? >>>>> Download Now

    >>>>> Download Full

    Welcome To Www.Trstrichy.Blogspot.Com: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வது எப்படி? >>>>> Download LINK

    >>>>> Download Now

    Welcome To Www.Trstrichy.Blogspot.Com: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வது எப்படி? >>>>> Download Full

    >>>>> Download LINK

    ReplyDelete