Monday, 27 January 2014

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் ஆசிரியர் மீது நடவடிக்கை


பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை:நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியை அடுத்த கொண்டல் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு ஆதிதிராவிடர் தொடக்கப்பள்ளியில் பயின்று வரும் பத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் அதே பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றும் மூவேந்தன் என்பவரால் பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இச்செய்தி மிகுந்த வருத்தமும், வேதனையும் அளிக்கிறது. மாணவ-மாணவிகளுக்கு படிப்பையும், நல்ல புத்தியையும் கற்றுத்தர வேண்டிய ஆசிரியரே மிருகமாக மாறி இது போல நடந்து கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

வேலியே பயிரை மேயும் இது போன்ற நிகழ்வுகள் தொடர அனுமதிக்கப்பட்டால், அதன் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதை நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது. மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் மூவேந்தனை உடனடியாக தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும். அவனுக்கு துணையாக இருந்த பள்ளியின் மற்ற ஆசிரியர்கள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள மற்ற பள்ளிகளில் இதுபோன்ற கொடுமைகள் நடக்காமல் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment