Tuesday, 21 January 2014

ஓய்வு பெற்ற உதவிக்கல்வி அலுவலர் உடல் மருத்துவ ஆய்வுக்கு தானம்: கல்வியாளர்கள் பாராட்டு

 பெரம்பலூர் துறையூர் சாலையில் உள்ள கல்யாண் நகரைச் சேர்ந்தவர் கவிஞர் ஆடல் (எ) நடேசன், 65. ஓய்வு பெற்ற உதவிக்கல்வி அலுவலர். தமிழ் மீது பற்றுகொண்ட நடேசன் தமிழ் இலக்கியப்பூங்கா என்ற அமைப்பை நிறுவி திருவள்ளுவர் தவச்சாலை, உலகத்தமிழ் கட்டுமான இயக்கத்திலும் பொறுப்பாளராக இருந்து வந்தார்.
நடேசன் தான் இறந்தபிறகு தனது உடலை தானம் செய்து விடுமாறு குடும்பத்தினரிடம் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் நடேசன் நேற்று முன்தினம் இறந்தார். இதையடுத்து நடேசன் மனைவி கோமதி, மகன்கள் தொல்காப்பியன் , முத்தமிழ்காப்பியன், மகள் கவிதாதேவி ஆகியோர் பெரம்பலூர் அரிமா சங்கத்தை அணுகி இறந்து போன நடேசனின் கண்களை தானமாக அளித்தனர்.
பின்னர் இறந்த நடேசனின் உடலை அவரது விருப்பப்படி திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதன் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு போய் நடேசன் உடலை ஒப்படைத்தனர். பெரம்பலூர் மாவட்டத்தில் முதன் முறையாக நடேசனின் உடல் தானமாக வழங்கப்பட்டதற்கு அரிமா சங்கம், தமிழ் இலக்கிய ஆர்வலர்கள், கல்வியாளர்கள், தொண்டு நிறுவனங்களின் நிர்வாகிகள் அவரது குடும்பத்தினரை பாராட்டினர்.

No comments:

Post a Comment