:தேர்தலில் ஓட்டு போட, பணம் வாங்கக் கூடாது' என, மாணவர்கள் உதவியுடன், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.
தேர்தலில், ஓட்டுப் பதிவை அதிகப்படுத்துவது, பணம் பெற்று, மக்கள் ஓட்டளிப்பதை தடுப்பது போன்றவை குறித்து, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, அனைத்து துறை அதிகாரிகளுடனான, கலந்தாலோசனை கூட்டம், தலைமைச் செயலகத்தில், நேற்று நடந்தது.
கூட்டம் முடிந்த பிறகு, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி, பிரவீண்குமார் கூறியதாவது:தேர்தலில், ஓட்டுப்பதிவை அதிகப்படுத்த வேண்டும். பணம் வாங்கிக் கொண்டு, ஓட்டு போடக்கூடாது. ஓட்டுக்கு பணம் வாங்குவது, தவறான செயல் என்பதை, மக்கள் உணரச் செய்ய வேண்டும்.இது குறித்து, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, அனைத்து துறை அதிகாரிகள் கூட்டம் நடந்தது. மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, கல்லூரிகளின் என்.சி.சி., என்.எஸ்.எஸ்., மாணவ, மாணவியரை, பயன்படுத்த உள்ளோம்.இம்மாதம், 25ம் தேதி, தேசிய வாக்காளர் தினம். அன்று முதல், விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி துவங்கும். இது தொடர்பான விவரங்கள் அடங்கிய, துண்டுப் பிரசுரங்களும், மக்களுக்கு வழங்கப்படும்.வ்வாறு, அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment