Sunday, 19 January 2014

மூடுபனி மற்றும் கடும் குளிரால் ஆரம்ப பள்ளிகளுக்கு விடுமுறை


 வட மாநிலங்களில், கடந்த ஒரு மாதமாக கடும் குளிர் நிலவி வருகிறது. இதன் காரணமாக, பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களும், பணிக்கு செல்வோரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அரியானா மாநிலம், குருஷேத்திரா மாவட்டத்தில், வரும் 25ம் தேதி வரை, அனைத்து ஆரம்ப பள்ளிகளையும் மூடவும், அரசு மற்றும் தனியார் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளை, வரும் 31ம் தேதி வரை, காலை, 10:00 மணி முதல் பிற்பகல், 3:00 மணி வரை திறந்திருக்கவும், கலெக்டர் விகாஷ் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment