Saturday, 11 January 2014

மாணவர்கள் கழிப்பறை சுத்தம்: தலைமை ஆசிரியை "சஸ்பெண்ட்'

கழிப்பறையை, மாணவர்களைக் கொண்டு சுத்தம் செய்யவைத்த புகார் அடிப்படையில், பள்ளி தலைமை ஆசிரியை உட்பட, 2 பேர், "சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர். அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே, குருவாடி கிராமத்தில் பஞ்சாயத்து யூனியன் துவக்கப்பள்ளியில், 5 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். பள்ளி கழிப்பறையை, பள்ளி மாணவ, மாணவியரை க்கொண்டு சுத்தம் செய்ய வைத்தார் ஆசிரியை சரோஜா. இதுபற்றி, புகார் கொடுத்தும் உரிய நடவடிக்கை இல்லை. பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தனபால், அரியலூர் கலெக்டரிடம் கார் மனு கொடுத்தார். இதையடுத்து, தலைமை ஆசிரியை கஸ்தூரி, உதவி ஆசிரியை சரோஜா ஆகியோரை சஸ்பெண்ட் செய்து, கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment