வடகிழக்கு பருவமழை குறைந்ததாலும், தற்போது பனி அதிகளவில் நிலவி வருவதாலும், கோடைக்காலத்தில் வெப்பம் அதிகமாக இருக்கும் என, வானிலை ஆய்வு மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு பருவமழை ஏமாற்றியதால், வரும் ஏப்., மாதத்திற்குள், மேலும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அந்த மழை, தமிழகத்தை ஓரளவிற்கு நனைத்தால், குடிநீர் பிரச்னையில் இருந்து தப்பிக்கலாம். இந்த ஆண்டு துவக்கம் முதல், நேற்று வரை, 21 நாட்களில், கன்னியாகுமரி, ராமநாதபுரம், நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங் களில், இயல்பை தாண்டி அதிக மழை பெய்துள்ளது. சிவகங்கையில் இயல்பளவை ஒட்டி, மழை பதிவாகி உள்ளது. 18 மாவட்டங்களில் மழையே பெய்ய வில்லை; சென்னையும் அதில் ஒன்று. நேற்றைய நிலவரப்படி, கடலூரில் இயல்பளவான, 0.3 மி.மீட்டரை தாண்டி, 1.4 மி.மீ., மழையும், தஞ்சையில், 0.1 மி.மீட்டரை தாண்டி, 0.3 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. தமிழகம் முழுவதும், நேற்றைய நிலவரப்படி, இயல்பை விட, 52 சதவீதம் மழை குறைவாக பதிவாகிஉள்ளது.
No comments:
Post a Comment