Monday, 3 February 2014

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 10 சதவீதம் உயர்த்த மத்திய அரசு திட்டம்

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 10 சதவீதம் அதிகரிக்க மத்திய அரசு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விலைவாசி உயர்விற்கு ஏற்ப அவ்வப்போது அறிவிக்கப்படும் டிஏ எனப்படும் அகவிலைப்படியை தற்போதைய 90 சதவீதத்லிருந்து 100 சதவீதமாக அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக அதிகார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி கடந்த ஜனவரி மாதம் 1ம் தேதியிலிருந்து முன் தேதியிட்டு 10 சதவீததிற்கு குறையாமல் அகவிலைப்படி உயர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. வரும் 28ம் தேதி இந்திய நுகர்வோர் விலைப்பட்டியல் வெளியானதும் பஞ்சப்படி உயர்வுக்கான அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது. தற்போதைய நிலவரப்படி அகவிலைப்படி 9.3 சதவீதம் அதிகரிக்க வாய்ப்புள்ள போதிலும் அதை 10 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என்பதே மத்திய அரசின் திட்டமாக உள்ளதாக அரசு ஊழியர்கள் சங்கம் கூறியுள்ளது. அகவிலைப்படி 100 சதவீதம் உயர்வதால் அதை அடிப்படை சம்பளத்துடன் சேர்த்து கணக்கிட வாய்ப்புள்ளதாகவும் அந்த சங்கம் தெரிவித்துள்ளது. 

No comments:

Post a Comment