Monday, 3 February 2014

10% அகவிலைப்படி உயர்வு பற்றிய முறையான அறிவிப்பு தாமதம் ஏன்?

மத்திய அரசு 10% அகவிலைப் படி உயர்வை அறிவித்து, அதற்கான அரசாணையை வெளியிட்ட பின்னரே தமிழக அரசு அகவிலைப்படி அறிவிப்பை வெளியிடும். இது தான் வழக்கமான நடைமுறை. அகவிலைப்படி உயர்வு பற்றிய செலவின அறிக்கையை மத்திய அரசின் நிதித்துறை அமைச்சகம் தயார் செய்து, பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும். மத்திய அரசின் அமைச்சரவைக் கூட்டத்தில் அகவிலைப் படி உயர்வுக்கு ஒப்புதல் பெறப்பட்ட பிறகு மத்திய அரசு முறையான அறிவிப்பை வெளியிடும். அதன் பின் அரசாணை வெளியிடப்படும். இந்த அரசாணையைப் பின்பற்றி மாநில அரசுகளும் தங்கள் ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு பற்றிய அறிவிப்பை வெளியிடும். மத்திய அரசு பிப்ரவரி இறுதியில் அல்லது மார்ச் முதல் வாரத்தில் அகவிலைப்படி உயர்வு பற்றிய அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப் படுகிறது. அதன் பின் தமிழக அரசும் மார்ச் இரண்டாம் வாரத்தில் அல்லது மார்ச் மூன்றாம் வாரத்தில் அகவிலைப்படி உயர்வு பற்றிய அறிவிப்பை வெளியிடும்.ஜனவரி முதல் மார்ச் வரை 3 மாதங்களுக்கு நிலுவைத் தொகையாகவும், ஏப்ரல் மாதம் முதல் ஊதியத்திலும் அகவிலைப்படி உயர்வை மத்திய மாநில அரசுகளும் வழங்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.

No comments:

Post a Comment