Wednesday, 5 February 2014

குரூப் - 2 பிரிவில்,1,262 இடங்களை நிரப்ப 10ம் தேதி முதல் கலந்தாய்வு

 'குரூப் - 2 பிரிவில், 1,262 இடங்களை நிரப்ப, 10ம் தேதி முதல், கலந்தாய்வு நடக்கும்' என, அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) அறிவித்து உள்ளது.

அறிவிப்பு விவரம்: நேர்காணல் அல்லாத, 1,262 உதவியாளர் இடங்களுக்கான கலந்தாய்வு, 10ம் தேதி முதல், 18ம் தேதி வரை, தேர்வாணைய அலுவலகத்தில் நடக்கும். இதற்கு, 2,000 பேர் அழைக்கப்பட்டு உள்ளனர். இவர்களின் பதிவு எண்கள் விவரம், www.tnpsc.gov.in என்ற, தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. மேலும், அழைப்பு கடிதம், விரைவு அஞ்சல் மூலம், ஒவ்வொருவருக்கும் அனுப்பப்பட்டு உள்ளது. இவ்வாறு, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்து உள்ளது.

No comments:

Post a Comment